சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் பயிலரங்கம்

    By சிதம்பரம்  |   Published on : 02nd December 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக வணிகவியல் பிரிவு சார்பில் பொருள் வணிகமும், முதலீட்டு நுட்பமும் என்ற தலைப்பில் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

    வணிகவியல் பிரிவுத் தலைவர் கே.விஜயராணி வரவேற்றார். சென்னை மல்டி கம்மோடிட்டி எக்ஸ்சேன்ஞ் ஆஃப் இந்தியா நிறுவன மேலாளர் ராஜேஷ் பொருள் வணிகத்தை பற்றி சிறப்புரையாற்றினார்.

    சென்னை அம்பாலால் பங்கு மற்றும் பொருள் வர்த்தக தனி நிறுவன மேலாளர் எஸ்.செந்தில்குமார் மற்றும் எம்.விஜயபாபு ஆகியோர் பங்கு வணிகத்தில் உள்ள முதலீட்டு நுட்பங்களை பற்றி விளக்கவுரையாற்றினர்.

    பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.எம்.சந்திரசேகரன், வணிகவியல் துறைத் தலைவர் ஜி.வசந்தி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.

    பயிலரங்கை உதவிப் பேராசிரியர்கள் எம்.திருநாராயணசாமி, எஸ்.திருமாறன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். பயிலரங்கில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 267 பேராசிரியர்கள், இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai