சுடச்சுட

  

  சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்த குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அக்குளங்களை மீட்டெடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதற்காக இந்து ஆலய பாதுகாப்பு குழுத் தலைவர் மற்றும் செயலருக்கு சென்னை ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

  சிதம்பரம் நகரில் நடராஜர் கோயில் தீர்த்தகுளங்களான திருப்பாற்கடல், ஆயிகுளம், அண்ணாகுளம், தச்சங்குளம், ஓமக்குளம், தில்லைக் காளியம்மன் கோயில் குளம், ஓமக்குளம், குளம் என 12 தீர்த்த குளங்கள் உள்ளன.

  ஆக்கிரமப்பில் இருந்த இக்குளங்களை இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி மீட்டெடுத்தனர். பின்னர், இக்குளங்கள் தூர்வாறப்பட்டு நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. இதற்காக இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலர் வி.சந்திரசேகர் ஆகியோருக்கு ரீச் ஹெரிடேஜ் பவுன்டேஷன் அமைப்பு, உயரிய விருதான ரீச் ஹெரிடேஜ் அவார்டு என்ற விருதை கடந்த நவம்பர் 29-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் கலைமாமணி வி.பாலகுமாரன் முன்னிலையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் வழங்கி கௌரவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai