சுடச்சுட

  

  காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வளாக நேர்காணல் சனிக்கிழமை நடைபெற்றது.

  எம்.ஆர்.கே. தொழில்நுட்பக் கல்லூரி 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது இறுதி ஆண்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் இயந்திரவியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

  சென்னையைச் சேர்ந்த கெஸ்ட்டெம் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிட் நிறுவன மனிதவள அதிகாரி கே.ஜெயராமன் தலைமையில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  முகாமில் பங்கேற்ற 58 மாணவர்களில் 12 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரித் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆப்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai