சுடச்சுட

  

  திட்டக்குடியில் உலக எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு தினப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

  உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திட்டக்குடி அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  அதனை முன்னிட்டு பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

  பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலுசாமி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், என்.எஸ்.எஸ். உதவித் திட்ட அலுவலர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பட்டதாரி ஆசிரியர் வாசு வரவேற்றார். திட்டக்குடி அரசு தலைமை மருத்துவமனை ஐ.சி.டி.சி. ஆலோசகர் வெங்கடாசலபதி பேரணியை தொடங்கி வைத்தார்.

  பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்தனர்.

  எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தலைமை மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் எய்ட்ஸ் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், புறக்கணித்தல் இல்லாத தமிழகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

  நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ராஜா, தினகரன், பாரிசெல்வி, கார்த்திகா, ஹரிகரன், கஸ்தூரி, தலைமை செவிலியர் ராணி, குப்பு, மாலா உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai