சுடச்சுட

  

  தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்க கடலூர் மாவட்ட 7-வது மாநாடு பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலர் சி.கே.பன்னீர்செல்வம் வரவேற்றார். மாநிலச் செயலர் எம்.முனுசாமி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

  ஏஐடியூசி மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன், அமைப்புசாரா சங்க மாவட்டச் செயலர் பி.துரை, பொதுச்செயலர் கே.முத்துக்குமரன், மாவட்டக் குழு என்.கே.பாஸ்கரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  நிர்வாகிகள் தேர்வு: மாவட்டச் செயலராக டி.கே.பன்னீர்செல்வம், தலைவர் சி.வீரப்பன், துணைத் தலைவர்களாக பி.பாஸ்கரன், கே.பன்னீர்செல்வம், துணைச் செயலர்களாக கே.வைத்தியலிங்கம், ஜி.முருகன், பொருளராக பி.கலியபெருமாள் உள்ளிட்ட 23 பேர் மாவட்டக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

  மாநாட்டில், நலவாரிய நிதியை நலத் திட்டப் பணிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும். நலத் திட்ட உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். விபத்து சிகிச்சை மற்றும் விபத்துக் கால பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai