சுடச்சுட

    

    நெய்வேலியில் கார் மோதியதில் மொபெட்டில் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    நெய்வேலி நகரியம் பகுதியைச் சேர்ந்தவர் சு.அருள்ஜோதி (49). அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இக்கடையில் அவரது தந்தை கு.சுந்தரம் (74) உதவியாக இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த 29-ம் தேதி தனது மொபெட்டில் சென்னை-கும்பகோணம் சாலையில் சுந்தரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் மொபெட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை

    பலனின்றி திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து, நெய்வேலி நகரியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai