சுடச்சுட

  

  குறைதீர் கூட்டத்தில் ரூ.8 லட்சம் நலத் திட்ட உதவி

  By கடலூர்,  |   Published on : 02nd December 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.8.83 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த குறைதீர் கூட்டத்தில், இலவச மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 354 மனுக்கள் அளித்தனர்.

  மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கோரிக்கை மனுக்களின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

  தொடர்ந்து, தாட்கோ மூலம் ரூ. 6.72 லட்சத்தில் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.11 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

  2013-2014-ம் ஆண்டின் அரசுப் பணியாளர்களுக்கான சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பணியாளர்கள், சேலத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஆகியோர் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai