சுடச்சுட

  

  கொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

  By சிதம்பரம்  |   Published on : 02nd December 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்டத் தகராறில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  சிதம்பரம் அருகேயுள்ள சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த கொடிகருப்பன் (25). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர், கடந்த 13-4-12 ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கும் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

  பின்னர், கொடிகருப்பன் சென்னைக்குச் செல்ல சதீஷ் வீட்டின் வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (46), காவேரி (45), ரமா (33) ஆகிய மூவரும் கொடிகருப்பனை பிடித்துக் கொள்ள, சதீஷ் கத்தியால் மார்பு மற்றும் உடலில் குத்திவிட்டு தலைமறைவாயினர்.

  இதில் பலத்த காயமடைந்த கொடிக்கருப்பன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கண்ட நால்வரையும் கைது செய்து சிதம்பரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வந்தனர்.

  அரசு தரப்பில் வழக்குரைஞர் ஏ.நடனம் வாதாடினார். வழக்கு விசாரணை நிறைவுற்று நீதிபதி ராதிகா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

  குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், சக்திவேல், காவேரி, ரமா ஆகியோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,250 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai