Enable Javscript for better performance
சாலை விபத்தில் ஆந்திர பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஆந்திர பெண் உயிரிழந்தார்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள கோரளம்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசெட்டி.

    இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டார். பின்னர், மதுரையில் இருந்து காரில் திருப்பதிக்கு திரும்பினர். கார், கடலூர் மாவட்டம், வேப்பூர் மேம்பாலம் அருகில் திங்கள்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தது.

    அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக நாராயணசெட்டி மனைவி சுசிலாம்பாள் (65) கீழே இறங்கியுள்ளார். அப்போது, அவ்வழியாகச் சென்ற வாகனம் சுசீலாம்பாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai