Enable Javscript for better performance
திட்டக்குடியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

    By கடலூர்  |   Published on : 02nd December 2014 03:35 AM  |   அ+அ அ-   |    |  

    திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்பணி தற்போது ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நிரந்தர முகாம் அமைத்து நடத்தப்படுகிறது.

    அதன்படி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை திட்டக்குடி வட்டாட்சியர் தேவநாதன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணதாஸ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆதார் அட்டைக்கான கணினி இயக்குநர்கள் கார்த்திக், முத்துராஜ் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai