சுடச்சுட

    

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் மூன்றாம் சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்

    திங்கள்கிழமைகளில் சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். முதல் மற்றும் இரண்டாம் சோமவார நிகழ்ச்சி ஏற்கெனவே நடந்தது.

    இந்நிலையில், திங்கள்கிழமை மூன்றாம் சோமவார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, பிற்பகல் 2 மணிக்கு பெரியநாயகி அம்பாள் சமேத வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிப்படி வலம்புரி இடம்புரி இத்யாதி 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரமும், பெரியநாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சுவாமி அம்பாள் உற்சவ மூர்த்தி சிறப்பு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு சோட சோபசார தீபாராதனை,

    வீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற்றது. சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி

    தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai