சுடச்சுட

  

  "பன்னாட்டு சந்தைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்க வேண்டும்

  By 'கடலூர்,  |   Published on : 02nd December 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பன்னாட்டு சந்தைக்கேற்ப பெட்ரோல் விலை குறைக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து இயக்கப் பொதுச்செயலர் கி.வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசின் பெட்ரோலியத் துறை டிசம்பர் 1-ம் தேதி முதல் டீசல், பெட்ரோல் விலையை குறைத்துள்ளதாகச் சொல்கிறது. அன்று, பெட்ரோலியத்தின் பன்னாட்டு விலை பீப்பாய்க்கு 65 டாலர். அதாவது இன்றைய நிலவரப்படி லிட்டருக்கு 33.94 ரூபாய்.

  இதன்படி பார்த்தால் இந்திய அரசு டீசலை வரி உள்பட லிட்டருக்கு ரூ.37.28 என்றும், பெட்ரோலை ரூ.40.29 ஆகவும் அறிவித்திருக்க வேண்டும்.

  ஆனால், விற்பனை வரியையும் சேர்த்து டீசல் விலையை 55.99 ரூபாய் என்றும், பெட்ரோல் விலையை வரி உள்பட 66.04 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது.

  உண்மை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதாக இந்திய அரசு கூறுவது அப்பட்டமான மோசடியாகும். எனவே, பன்னாட்டு சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai