சுடச்சுட

    

    மணல் குவாரிக்கு எதிராக திட்டமிட்டபடி போராட்டம்

    By விருத்தாசலம்,  |   Published on : 02nd December 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் குவாரி தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை (டிச.2) முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என 15 கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

    விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி வெள்ளாற்றுப் பகுதியில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வல்லியம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் எடுப்பதாகக் கூறி மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், மணல் குவாரியை மூடக் கோரியும் கடந்த சில நாள்களுக்கு முன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வல்லியம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

    இதுதொடர்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சு.சீனிவாசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை (டிச.2) மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராசு கூறுகையில், மணல் குவாரிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

    மணல் குவாரிக்கு எதிராக போராட முன்வரும் அப்பகுதி இளைஞர்களை காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர்.

    இது கண்டிக்கத்தக்கது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai