சுடச்சுட

  

  திருவள்ளுவர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவு பிறப்பித்த மத்திய அரசுக்கு ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து, சங்கத்தின் நிறுவனத் தலைவர் இராம.முத்துக்குமரனார் வெளியிட்ட அறிக்கை:

  மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் நாடாளுமன்றத்தில் தமிழ்மொழியின் சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் சிறப்பித்து பேசியுள்ளார். மேலும், திருக்குறளை பெருமைப்படுத்தும் விதமாக திருவள்ளுவர் பிறந்த நாளை வட மாநிலங்களிலும் கொண்டாட வேண்டுமென வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வட மாநிலங்களில் திருவள்ளுவர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

  எனவே, மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தருண்விஜய் ஆகியோருக்கும் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம். மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பதோடு, உலகப் பொதுமறையாகவும்

  அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai