சுடச்சுட

  

  புதுசத்திரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை சார்பில், பரங்கிப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிடங்கள் கிராமத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு புதுசத்திர வட்டார மருத்துவ அதிகாரி அமுதா பெருமாள் தலைமை வகித்தார். மருத்துவர்கள் பிரபா, சுகன்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு விருந்தினராக சிதம்பரம் எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று மருத்துவக் காப்பீடு கருத்தரங்கம் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

  முகாமில் புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 15 மருத்துவர்கள் இதயநோய், எலும்பு முறிவு, கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, தொற்றுவான் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

  முகாமில் அனைத்து வகை நோய்களால் பாதிக்கப்பட்ட 26 நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரையும் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற மருத்துவ அதிகாரி அமுதா பெருமாள் பரிந்துரை செய்தார்.

  முகாமில் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர்

  கே.அசோகன், ஊராட்சிமன்றத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai