Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு

    By விருத்தாசலம்  |   Published on : 02nd December 2014 03:34 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    டெங்கு காய்ச்சலை தவிர்க்கும் பொருட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஈரநிலம் அறக்கட்டளை சார்பில், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மற்றும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் நில வேம்புச் சாறு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஈரநிலம் அறக்கட்டளைத் தலைவர் ஓவியர் தமிழரசன் வரவேற்றார். பாத்திமா மெட்ரிக் பள்ளி முதல்வர் அருள்மேரி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விருத்தாசலம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் தவமணி நில வேம்புச் சாறின் பயன்கள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில், ஈரநிலம் அறக்கட்டளை துணைத் தலைவர் மஞ்சப்பன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai