சுடச்சுட

  

  எண்ணெய் வித்து சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

  By  பண்ருட்டி,  |   Published on : 03rd December 2014 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எண்ணெய் வித்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
   எண்ணெய் வித்துகளுக்கான தேசிய இயக்கம் 2014-2015-ன் கீழ் சாகுபடி தொழில் நுட்பம் குறித்த இரண்டு நாள் பயிற்சி அண்ணா கிராமம் வட்டாரம் திராசு கிராமத்தில் நவம்பர் மாதம் 27, 28 தேதிகளில் நடைபெற்றது.
   ஊராட்சி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். இளவரசன் வரவேற்றார். வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், எண்ணெய் வித்துப் பயிர்களில் பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் தலைவர் எம்.எஸ். அனீசாராணி கலந்துகொண்டு எண்ணெய் வித்துப் பயிர்களில் உயர் தொழில் நுட்பம் குறித்தும், தோட்டக்கலை துணை இயக்குநர் வி. ராமலிங்கம் விதை உற்பத்தி தொழில் நுட்பம் மற்றும் தோட்டக்கலைத் துறை மானிய திட்டம் குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விஷ்ணுராம் மேத்தி பயிர்களில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.
   அண்ணா கிராமம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வி. பிரேமா நிழல்வலைகூடம், சொட்டுநீர் பாசனத்தின் நன்மைகள் மற்றும் மானியம் குறித்தும், வட்டார வேளாண்மை அலுவலர் ப.சின்னகண்ணு விதை நேர்த்தி மற்றும் உயிர் உரங்களின் நன்மை குறித்தும் விளக்கிப் பேசினர்.
   பயிற்சிக்கான ஏற்பாடுகளை அண்ணா கிராமம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் டி. ராமதாஸ், ஆர். பாஸ்கர்ராஜ், கே. ரமேஷ், க. செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai