சுடச்சுட

    

    பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு பள்ளி வாளகத்தில் கருத்தரங்கு மற்றும் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     பள்ளித் தலைமையாசிரியர் டி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர்கள் ரமா, ராஜேஷ்கண்ணா எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்தும் சிகிச்சை முறை குறித்தும், எய்ட்ஸ் நோயாளிகளை அரவணைப்புது குறித்தும் விளக்கிப் பேசினர். மேலும் மாணவர்கள் எழுப்பிய சந்தேக கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பின்னர் மாணவர்கள் கலந்துகொண்ட பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
     பேரணியில் எய்ட்ஸ் குறித்த கோஷங்களை எழுப்பியபடி, துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர். உதவித் தலைமையாசிரியர் அமலி, சாரணர் ஆசிரியர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.மோகன்குமார் செய்திருந்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai