Enable Javscript for better performance
கடற்கரை விளையாட்டுப் போட்டி:  பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடற்கரை விளையாட்டுப் போட்டி:  பங்கேற்க அழைப்பு

    By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 12:49 PM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
     இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோ.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2014-15-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் ஆண், பெண்களுக்கு டிச. 4, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
     டிச.4-ம் தேதி கடற்கரை கையுந்து, கபடி போட்டியும், டிச.5-ம் தேதி கடற்கரை கால்பந்து போட்டியும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதில்
     பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai