சுடச்சுட

  

  குறைகேட்புக் கூட்டம்:  வருவாய் அலுவலர்கள் கோரிக்கை

  By  கடலூர்  |   Published on : 03rd December 2014 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணியாளர் குறைகேட்பு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென தமிழ்நாடு வருவாய்த் துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
   இச் சங்க பொதுக்குழு கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். சிவா தலைமை வகித்தார்.
   கூட்டத்தில், காலியாகவுள்ள துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்களை தாற்காலிக பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும், பணியாளர் குறைகேட்பு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும்,
   மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் விடுமுறை நாள்களில் சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும், வருவாய்த்துறையின் பல்வேறு நிலைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் சங்கத்தின புதிய தலைவராக எஸ். சிவா, செயலராக அ. பலராமன், பொருளர் சா.கீதா, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆர். சையத்அபுதாகீர், எல். கரிகாலன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai