சுடச்சுட

  

  கூடுதல் கட்டணம் வசூல்:  சிற்றுந்தை சிறைபிடித்த மாணவர்கள்

  By  விருத்தாசலம்,  |   Published on : 03rd December 2014 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம் அருகே சிறுவம்பார் கிராமத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த சிற்றுந்தை பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   சிறுவம்பார் கிராமத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் மங்கலம்பேட்டையில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் சிறுவம்பார் கிராமத்துக்கு அரசுப் பேருந்துகள் இல்லாததால், சிற்றுந்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
   இந்நிலையில் திங்கள்கிழமை வரை 6 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை முன்னறிவிப்பின்றி 1 ரூபாய் உயர்த்தி 7 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சிற்றுந்தை காலை 8.30 மணிக்கு சிறைபிடித்து போராட்டத்தில்
   ஈடுபட்டனர்.
   அதிகாரிகள் யாரும் செல்லாததைத் தொடர்ந்து போராட்டத்தை சுமார் 10.30 மணிக்கு கைவிட்டு சிற்றுந்தை விடுவித்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai