Enable Javscript for better performance
கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By  விருத்தாசலம்,  |   Published on : 03rd December 2014 12:46 PM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநிலக்குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை ஏற்றார். நிர்வாகிகள் மாயவன், வேல்மணி, மஞ்சுளா, வேலு, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநிலத் தலைவர் ஜான்சிராணி, சி.பி.எம். வட்டச் செயலர் அசோகன், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     போராட்டத்தின் போது, மாற்றுத் திறனாளிகள் துறை மூலமே மாத உதவித்தொகை வழங்க வேண்டும், அடையாளச் சான்று கொடுக்கப்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், என்.எல்.சி. நிர்வாகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி 3 சதவீத பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai