சுடச்சுட

  

  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்து 6 செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
   விருத்தாசலம் அரசு மருத்துவமனை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 24-ம் தேதி மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். 25-ம் தேதி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வித்யாசங்கர் ஆய்வு செய்தார்.
   மீண்டும் செவ்வாய்க்கிழமை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வித்யாசங்கர் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் செவிலியர்களாகப் பணியாற்றிய யசோதா சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், ஜெயந்தி, வைலட்ராணி, சுதாகரன், அமுதா மற்றும் பத்மாவதி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai