Enable Javscript for better performance
தீக் காயம் அடைந்த முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தீக் காயம் அடைந்த முதியவர் சாவு

    By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 12:44 PM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் அருகே தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
     கடலூர் அருகேயுள்ள எஸ்.என். சாவடியைச் சேர்ந்தவர் வே. ஆறுமுகம்(63). உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார்.
     திங்கள்கிழமை வீட்டில் அவர் கட்டிலில் படுத்திருந்த நிலையில் பீடி புகைப்பதற்காக பற்ற வைத்த தீக்குச்சியை அணைக்காமல் கட்டிலிலே போட்டதாக தெரிகிறது. இதில், அவரது உடையில் தீப்பிடித்து காயமுற்றார். பலத்த தீக்காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     இதுகுறித்து அவரது மகன் செல்வம் (40) கொடுத்த புகாரில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai