சுடச்சுட

  

  ரயில் மறியலுக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

  By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சியினர் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கினர்.
   காவிரியில் கர்நாடக அரசு 2 தடுப்பணைகளை கட்டும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் வியாழக்கிழமை (டிச. 4) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
   இதனையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் செல்லப்பன், துணைச்செயலர் குறிஞ்சிவளவன், நகர் மன்ற உறுப்பினர் திருவரசு, சமூக ஆர்வலர் சரித்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலர் சேகர், சிறுபான்மைப் பிரிவு தமிமூன்அன்சாரி, சேத்தியாதோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார், நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் வஜ்ரவேல் உள்ளிட்டவர்கள் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வணிகர் சங்கம் உள்ளிட்ட வியாபாரிகளிடம் போராட்டத்தை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கினர்.
   போராட்டத்துக்கு சிதம்பரம் வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai