சுடச்சுட

  

  லஞ்சம்: ஊராட்சி மன்ற  பெண் துணைத் தலைவர் கைது

  By  பண்ருட்டி,  |   Published on : 03rd December 2014 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு மானியத்தில் வீடு கட்டும் பயனாளியிடம் ரூ.800 லஞ்சம் பெற்றதாக, பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற பெண் துணைத் தலைவரை கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம் நடுமேட்டுக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (30), விவசாயி. இவர் அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.
   கட்டுமானப் பணிக்கான 2ஆம் கட்ட தவணைக்குரிய காசோலை வாங்க சத்யராஜ், பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான நடுகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (43)( படம்) என்பவரை அணுகியுள்ளார். அதற்கு அவர் ரூ.800 லஞ்சம் கேட்டாராம்.
   இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு சத்யராஜ் தகவல் அளித்தார். இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சத்யராஜ், ஊராட்சி துணைத் தலைவர் சாந்தியிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சாந்தியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
   ஊராட்சி பெண் துணைத் தலைவர் கைது குறித்து ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai