சுடச்சுட

  

  வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

  By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 01:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
   அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை, வங்கிக் கடனுதவி, ஊனமுற்றோர், விதவை, மனவளர்ச்சி குன்றியோர், முதியோர் ஆகியோருக்கு, நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார் கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தை அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான நலச் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
   இந்த போராட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் தலைமை வகிக்க இணைச் செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விவசாய சங்க வட்டச் செயலர் புகழேந்தி, சங்க நிர்வாகிகள் ராஜசேகர், பாக்கியலட்சுமி, குணவதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
   தகவலறிந்த காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 15 நாள்களில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி
   தரப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai