சுடச்சுட

  

  சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2013-14-ம் ஆண்டுக்கான விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
   அதன்படி மாநில விருதுக்கு தேர்வு செய்யப்படும் 5 ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்புக்கு தலா ரூ. 3 லட்சமும், 10 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.
   மாவட்ட விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு ரூ. 1 லட்சமும், 3 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ. 25ஆயிரமும் வழங்கப்படும். இவ்விருது பெற கூட்டமைப்பு துவங்கி 2 ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களும் கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 20 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
   சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 2-வது முறை தர ஆய்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 2 அலுவலக பிரதிநிதிகளை குறைந்தது ஒருமுறையாவது சுழற்சி முறையில் மாற்றியமைத்திருத்தல் வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 முறையாவது கடன் பெற்று நிலுவையின்றி திரும்ப செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
   2013-14, 2014-15-ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படுவதால் அனைத்து செயல்பாடு வரையறைகளும் ஜூலை மாதத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
   இந்த தகுதிகள் கொண்ட கூட்டமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், எண்.2, ராதா நகர், பீச் ரோடு, வண்ணாரப்பாளையம், கடலூர். என்ற முகவரியில் விண்ணப்பத்தை பெற்று டிசம்பர் 5-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai