சுடச்சுட

    

    கடலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக 2ஜி முறைகேடு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் எம்ஜிஆர் சிலை அருகில் அண்மையில் நடைபெற்றது.
     இளைஞரணி செயலர் இரா.வெ.பெருமாள்ராஜா தலைமையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
     இதில், மக்களவை உறுப்பினர் ஆ. அருண்மொழித்தேவன், சட்டப்பேரவை உறுப்பினர் செல்வி ராமஜெயம், கட்சியின் அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலர் முருகுமணி, நகரச் செயலர் ஆர். குமரன், ஒன்றியச் செயலர் ராம. பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் ஆர். மாதவன், பொருளர் ஆர். கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai