சுடச்சுட

  

  கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அனைத்து படிகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடந்தது.

  கடலூர் அண்ணா பாலம் அருகேயுள்ள பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், மாவட்டச் செயலர் என்.காசிநாதன் ஆகியோர் பேசினர். நிர்வாகி மனோகரன் பேரணியை தொடங்கி வைத்தார்.

  பேரணி பாரதியார் சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டப் பொருளர் கே.சதீஷ்குமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai