Enable Javscript for better performance
ஆளில்லா ரயில்வே கேட்டை திறக்க கிராம மக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆளில்லா ரயில்வே கேட்டை திறக்க கிராம மக்கள் கோரிக்கை

    By விருத்தாசலம்  |   Published on : 04th December 2014 03:30 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை திறக்கக் கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.

    குப்பநத்தம் கிராமம் வழியாக விருத்தாசலத்திலிருந்து கடலூர் செல்லும் இருப்புப் பாதையில் எல்.சி.-57 எண் கொண்ட ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாகச் சென்றுதான் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் கரும்பு உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியுள்ளதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், தற்போது கரும்பு அறுவடை நேரம் என்பதால், மூடப்பட்ட பாதையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமாரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai