சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி அரசு நவீன அரிசி ஆலை வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அரசு நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்டச் செயல்முறை கிடங்கில் இருப்பில் உள்ள பொருள்களின் தரம் மற்றும் எடையை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

  ஆய்வுக்குப் பின்னர், அவர் கூறியது: கிடங்கில் இருப்பில் இருந்த பொருள்களின் தரம் மற்றும் எடை ஆய்வு செய்யப்பட்டது. சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்படும் உப்பின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி, பொது விநியோகத் திட்ட அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதில் அவற்றின் தரம் நன்றாக இருந்தது தெரியவந்தது. பொது விநியோகத்துக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், மறு எடையிட்டு சரிபார்க்கப்பட்டது.

  கிடங்கில் 736 கிலோ கொண்டைக் கடலை, புழுங்கல் அரிசி சன்னரகம் 2336.838 மெ.டன், புழுங்கல் அரிசி பொதுரகம் 36.685 மெ.டன், துவரம் பருப்பு 38.426 மெ.டன், பச்சரிசி சன்னரகம் 689.376 மெ.டன், பச்சரிசி பொது ரகம் 78.905 மெ.டன், உப்பு 26.832 மெ.டன், சர்க்கரை 821 கிலோ, உளுத்தம் பருப்பு 57 கிலோ, கோதுமை 131.569 மெ.டன், பாமாலின் பாக்கெட் 2118 ஆகியவை இருப்பில் உள்ளன.

  மேலும், சுமை தூக்கும் பணியாளர்களுக்கு ஓய்வு அறை கட்டித் தரவும், அவர்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் உணவக வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

  ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், துணைப் பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) நா.கமலக்கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் வெ.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai