Enable Javscript for better performance
சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்: இளைஞர் கைது

    By பண்ருட்டி,  |   Published on : 04th December 2014 03:27 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி ரயில்நிலையம் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரகலாதன் (25) என்பவர் மது போதையில் பேசிக்கொண்டிருந்தார். அவரை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் துளசிதாஸ் எச்சரித்த போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக துளசிதாஸ் அளித்த புகாரின் பேரில் பிரகலாதனை பண்ருட்டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai