சுடச்சுட

  

  சாலை விரிவாக்கம்: மாற்று இடம் கோரி கோட்டாட்சியரிடம் மனு

  By விருத்தாசலம்,  |   Published on : 04th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரத்தில் சாலையோரம் வசித்து வரும் மக்கள், மாற்று இடம் கோரி கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

  கம்மாபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்காக சாலையோரம் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் என்.எஸ்.அசோகன் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமாரைச் சந்தித்து மனு அளித்தனர்.

  அப்போது, கட்சியின் வட்டக்குழு சிவஞானம், கம்மாபுரம் கிளை உறுப்பினர்கள் அன்பழகன், பன்னீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  அவர்கள் அளித்த மனுவில், கம்மாபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை காலி செய்வதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

  தினக் கூலிகளாக இருக்கும் இம்மக்களுக்கு வேறு இடம் இல்லாத சூழ்நிலையில், அரசின் சார்பில் மாற்று இடமும், நஷ்ட ஈட்டுத்தொகையும், தற்போது குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்வதற்கு போதிய கால அவகாசமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

  மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, புவனகிரி எம்எல்ஏ செல்வி ராமஜெயம், கம்மாபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வராஜ், கம்மாபுரம் ஊராட்சித் தலைவர் ராமசாமி, அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் முனுசாமி உள்ளிட்டோர் கோட்டாட்சியரிடம்

  மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai