சுடச்சுட

    

    சிலம்பம் போட்டியில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

    மாநில அளவிலான சிலம்பம் போட்டி நவம்பர் 26 முதல் 28 வரை சேலத்தில் நடைபெற்றன. மாநிலத்தில் உள்ள

    பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சந்தியா, ஜீவகணேசன், ரங்கராஜன் ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பள்ளித் தாளாளர் வீரதாஸ் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். அப்போது, பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai