சுடச்சுட

  

  விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

  மணவாளநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், சுகாதார ஆய்வாளர் நாட்டுத்துரை வரவேற்றார். வழக்குரைஞர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ஆதிபராசக்தி, துணைத் தலைவர் சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஜனார்த்தனன், கருவேப்பிலங்குறிச்சி மருத்துவர்கள் ரமா, மதுரகவி ஆகியோர் விளக்கிப் பேசினர்.

  மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி, வழக்குரைஞர் அருள்குமார், சுகாதார ஆய்வாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai