Enable Javscript for better performance
நகைப் பறித்தவர் போலீஸில் சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம் நகை பறித்தவர் போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது பிடிபட்டார்.

    திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமுருகன் மற்றும் போலீஸார் புதன்கிழமை கம்மியம்பேட்டை பாலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அ.நவாப்ஜான் என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் அண்மையில் போடி செட்டித் தெருவில் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 13 கிராம் நகை பறித்துச் சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து, நவாப்ஜானை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த 4 கிராம் தங்கம், மொபெட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai