சுடச்சுட

  

  பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் செல்வகுமார் வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலர் திருஞானம் தலைமை வகித்தார். நகரச் செயலர் சிங்காரவேல், ஒன்றிய நிர்வாகிகள் செல்வராசு, ஆடியபாதம், ராஜவேல், வெங்கடேசன், குணசேகரன், சாமிநாதன், காசி, செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.

  கூட்டத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து, அன்புமணி ராமதாசை முதல்வராக்க கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் தீவிரமாக பணியாற்றுவது.

  கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கியும், நிகழ் அரவைப் பருவத்தில் டன்னுக்கு ரூ. 5,000 நிர்ணயம் செய்து, காலதாமதம் இன்றி விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில், குப்புசாமி, கலியபெருமாள், வீரகோவிந்தன், தனபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai