சுடச்சுட

  

  பாரதியார் பிறந்த தின போட்டிகளை கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் அறிவித்துள்ளது.

  கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியாரின் 133-வது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு ஓவியம், பாரதியாரின் பாடல்களில் "எனக்கு மிகவும் பிடித்த பாட்டு' என்ற தலைப்பில் ஒரே ஒரு பாடலைத் தேர்வு செய்து அதன் முதல் இரண்டு வரிகளை மட்டும் குறிப்பிட்டு அந்த பாடலின் சிறப்பம்சம் குறித்து சுருக்கமாக உள்நாட்டு கடிதத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.

  இதில், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பங்கேற்கலாம். இதற்கான ஓவியம், கவிதை விமர்சனங்களை டிசம்பர் 6-ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம், எண்.41, காமராஜர் நகர், ஆல்பேட்டை, கடலூர் -607 001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அளிக்கலாம். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசளிக்கப்படும் என்று மன்றத் தலைவர் நாகராசன்

  தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai