சுடச்சுட

  

  விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை

  நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது.

  மங்கலம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஈரநிலம் அறக்கட்டளை சார்பில், டெங்கு பாதிப்பை தடுக்கும் பொருட்டு, நில வேம்புச் சாறு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் தலைமை வகித்து மாணவர்களுக்கு நில வேம்புச் சாறு வழங்கினார்.

  ஈரநிலம் அறக்கட்டளைத் தலைவர் ஓவியர் தமிழரசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் வீரராகவன், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி, மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பாஸ்கர் ஆகியோர் டெங்கு பாதிப்பு குறித்தும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai