சுடச்சுட

  

  கடலூர் அரசு மாணவிகள் விடுதியில் முறைகேடு நடைபெறுவதாக மாணவிகள் ஆட்சியரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

  கடலூர் கம்மியம்பேட்டையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இதில் சுமார் 75 மாணவிகள் உள்ளனர்.

  இம்மாணவிகள் மற்றும் பசுமை தாயகம் நகரச் செயலர் சரவணன், இளைஞரணிச் செயலர் விஜயவர்மன் உள்ளிட்டோர் புதன்கிழமை கடலூர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

  மனுவில், அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், விடுதிக் காப்பாளர் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், குடிநீர்த் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் அசுத்தம் நிறைந்து காணப்படுவதாகவும், விடுதியைச் சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதால், அங்கிருந்து சில ஆண்கள் பாலியல் தொல்லைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

  மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க

  உத்தரவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai