சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

  மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.

  போட்டிகளில் பார்வையற்றோர் சிறப்புப் பள்ளி, காதுகேளாதோர் பள்ளி, மன வளம் குன்றியோர் சிறப்புப் பள்ளி உள்ளிட்ட அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 24 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  சக்கர நாற்காலி போட்டியில் ஓஏஐஎஸ் மாணவர்கள் கே.கார்த்திக்கேயன் முதலிடம், டி.ஜானகிராமன் 2-ம் இடம், எஸ்.வெற்றிச் செல்வன் 3-ம் இடம் பெற்றனர்.

  50 மீட்டர் ஓட்டம் ஆண்கள் பிரிவில் அன்புமணி, பெண்கள் பிரிவில் ஆர்.சுமதி, 50 மீட்டர் ஓட்டம் மன வளம் குன்றியோருக்கான ஆண்கள் பிரிவில் எம்.நித்யானந்தம், பெண்கள் பிரிவில் எஸ். நிஷாந்தினி, குளோபல் மூன்று சக்கர சைக்கிள் போட்டியில் எ.ஜான்குமார், 100 மீட்டர் ஓட்டத்தில் மன வளம் குன்றியோருக்கான ஆண்கள் பிரிவில் பி.அருண்குமார், பெண்கள் பிரிவில் எ.அனிதா 50 மீட்டர் ஓட்டம் ஆண்கள் பிரிவில் கலைக்குமார் வெற்றி பெற்றனர்.

  விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன், மாவட்ட திட்ட அலுவலர் கோ.அன்பழகி, மாவட்ட சமூகநல அலுவலர் இரா.புவனேஸ்வரி, இளநிலை மறுவாழ்வு

  அலுவலர் இரா.பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai