சுடச்சுட

  

  வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By கடலூர்,  |   Published on : 04th December 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலி அருகே 7 தலித் வீடுகளை தீவைத்து எரித்ததற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  நெய்வேலி அருகே உள்ள நைனார்குப்பத்தில் அண்மையில் 7 தலித் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைக் கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.

  மாவட்டப் பொருளர் இர.ஐயாயிரம் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் பெ.பாவாணன் வரவேற்றார்.

  மாநிலச் செயலர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகரச் செயலர் வி.சுப்புராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், வட்டச் செயலாளர் ஜெகரட்சகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்

  மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிவக்குமார், தாமோதரன் மமக தலைவர் எம்.மாதர்ஷா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மா.செ.சிந்தனைச்செல்வன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai