சுடச்சுட

  

  வேப்பூர் அருகே சாலை விபத்து:பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் காயம்

  By கடலூர்  |   Published on : 04th December 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேப்பூர் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் நாகர்கோவில் பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர்.

  திருவண்ணாமலையில் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் தீப திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கையர்க்கன்னி (41), தலைமைக் காவலர்கள் சுரேஷ் (24) செபஸ்டீன் (25) ஆகியோர் காரில் புறப்பட்டனர். காரை செபஸ்டீன் ஓட்டினார்.

  கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதியது. இதில், ஆய்வாளர் அங்கையர்க்கன்னி, தலைமைக் காவலர்கள் செபஸ்டீன், சுரேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  பின்னர், 3 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

  இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சேதமடைந்த காரை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீஸார் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

  தகவல் அறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. பாண்டியன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து

  விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai