சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் சமூக சமத்துவப்படை கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. நிர்வாகிகள் காமராஜ், கோபி, கார்வண்ணன், செங்குட்டுவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொன்மோகன்ராஜ் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

   கூட்டத்தில் நெய்வேலியில் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும், பஞ்சமி நிலம் மீட்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்,  வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கக்கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  நிர்வாகி வேலு வரவேற்க, ஒன்றிய செயலாளர் இந்திரபால் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai