சுடச்சுட

  

  சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் பேச்சு

  By கடலூர்,  |   Published on : 05th December 2014 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பேசினார்.

  திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் 82-வது பிறந்த நாள் விழா வடலூரில் அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத்தலைவர் தென்.சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் நா.தாமோதரன், கா.கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பேசுகையில், சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து அதனை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். எனினும், அந்தக்கோயிலை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும். இக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது இல்லை என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன என்றார்.

  பொதுச்செயலர் துரை.சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு அலுவலர் முன்னாள் ஒன்றிய தலைவர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் பேசினர்.

  மாவட்ட அமைப்பாளர்கள் சி.மணிவேல், கு.தென்னவன், மண்டல மகளிரணி செயலர் ரமாபிரபா, திமுக நகர செயலர் மு.ராமலிங்கம், தி.க.ஒன்றியத் தலைவர் இந்திரஜித், செயலர் ரா.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வடலூர் தலைவர் சு.ராவணன் வரவேற்றார், தி.க.அமைப்பாளர் சேகர் நன்றி கூறினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai