சுடச்சுட

  

  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்

  By கடலூர்,  |   Published on : 05th December 2014 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆசிரியர்களுக்கான காலமுறை ஊதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  அனைத்துத் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் எஸ்.அமுல்தாஸ் தலைமையில் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. தலித் கிறித்துவ விடுதலை இயக்க மாநில தலைவர் வல்லரசு, காப்பீட்டு கழக ஊழியர் சங்க செயலர் கே.பி.சுகுமாரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் கேத்தரின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

  கூட்டத்தில், கல்விக்கட்டண நிர்ணயகுழுவில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு பிரதிநித்துவம் அளிக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். பணிநிலைக்கு வரையறுக்கப்படாத வேலைகளை ஆசிரியர்கள் மீது நிர்வாகம் திணிக்கக் கூடாது.

  சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களையும் இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் ஆண்டு ஆய்வு அறிக்கையை பொதுமக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai