சுடச்சுட

  

  பாதிரிக்குப்பத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

  By கடலூர்,  |   Published on : 05th December 2014 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் பாதிரிகுப்பத்தில் அண்மையில் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் ஊராட்சியில் அண்மையில் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 316 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. இதில், ஒரு பயனாளியின் ஆடு இறந்தது.

  இதனைத்தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். இதில், மழை மற்றும் குளிர்காற்று காரணமாக ஆடு இறந்தது தெரிய வந்தது. எனினும், கடலூர் மண்டல கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் 3 குழுக்கள் கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், பாதிரிகுப்பம் காலனி, நவநீதம் நகர், சண்முகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி, மாத்திரைகள், குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கினர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai