சுடச்சுட

  

  தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி கடலூரில் மதிமுகவினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுச்செயலர் வைகோ தமிழகம் முழுவதும் நடைப்பயணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இந்நிலையில், பூரண மதுவிலக்குக்கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  அதன்படி, கடலூர் வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் கடலூர் உழர்சந்தை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ராமலிங்கம் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் சு.கண்ணன், மாணவரணி அமைப்பாளர் பி.பார்த்திபன், தொண்டரணி அமைப்பாளர் கா.கஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மயிலாடுதுறை அழகிரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள், சமுதாயச் சீரழிவு குறித்தும் அதனை பூரணமாக விலக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

  தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சௌந்தர்ராஜன், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் எம்.பிச்சை, மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோ.மன்றவாணன், மாவட்ட பொருளர் கோ.வேலு, துணைச்செயலர்கள் டி.திராவிடஅரசு, பெ.அய்யாவு, இந்திராகடல்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  ஆர்ப்பாட்டத்தில் மதுவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  நகர பொறுப்புக்குழு தலைவர் கோ.பா.ராமசாமி வரவேற்றார். மாவட்ட துணைச்செயலர் நாகை.ஜெயசங்கர் நன்றி கூறினார்.

  இதேப்போன்று சிதம்பரம் காந்திசிலை முன்பு பூரண மதுவிலக்குக்கோரி மதிமுக மாநில செயலர் வந்தியத்தேவன், மாவட்ட செயலர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai