சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் கடலூர் வெள்ளி கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கடலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் சார்பில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கடலூர் வெள்ளி கடற்கரையில் வியாழக்கிழமை கையுந்து பந்து, கபாடி போட்டிகள் நடத்தப்பட்டன.

  கபாடியில் 11 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணியும், கையுந்துப் போட்டியில் 8 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணி பங்கேற்று விளையாடின. முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.நந்தகுமார் தலைமை வகித்தார். தேவனாம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மணி போட்டிகளை துவக்கி வைத்தார்.

  இன்று (டிச.5) கால்பந்து போட்டியும், மாலையில் அண்ணா விளையாட்டரங்கில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai